தென்னாபிரிக்கா தொடரில் இருந்து முகமது ஷமி, தீபக் சாஹர் நீக்கம்… பிசிசிஐ அறிவிப்பு!

Deepak Chahar

தென்னாபிரிக்கா சென்றுள்ள இந்திய மூன்று விதமான தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், 3  டி20 தொடர் முடிந்த நிலையில், இரு அணிகளும் தலா போட்டிகளில் வெற்றி பெற்று தொடர் சமன் செய்யப்பட்டது. இதையடுத்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் நாளை முதல் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இடம்பெற்றிருந்த தீபக் சாஹர், குடும்ப மருத்துவ அவசரநிலை காரணமாக வரவிருக்கும் ஒருநாள் தொடரில் கலந்து கொள்ள முடியாது என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. அவருக்கு பதிலாக ஆகாஷ் தீப்பை தேர்வுக் குழு நியமித்துள்ளது. இதுபோன்று, தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து முகமது ஷமி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

IND Vs SA : ஒருநாள் போட்டிக்கான தொடரில் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்படமாட்டார்!

டெஸ்ட் தொடரில் ஷமி பங்கேற்பதற்கான உடற்தகுதி இல்லை என கூறி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதாவது, டெஸ்ட் தொடரில் பங்கேற்பது என்பது உடற்தகுதிக்கு உட்பட்டது, பிசிசிஐ மருத்துவக் குழுவால் ஷமி அனுமதிக்கப்படவில்லை. இதனால் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டார் என கூறப்பட்டுள்ளது. மேலும், நாளை ஜோகன்னஸ்பர்க்கில் முதல் ஒருநாள் போட்டி முடிவடைந்த பிறகு, டெஸ்ட் தொடருக்கு முன்பாக ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் இணைவார்.

அதே வேளையில்,  இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப் ஆகியோர் டெஸ்ட் அணியுடன் இணைந்து, பயிற்சிகளை மேற்கொள்வார்கள். இதுபோன்று, இந்திய ODI அணிக்கு பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக், பந்துவீச்சு பயிற்சியாளர் ரஜிப் தத்தா மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் அஜய் ராத்ரா ஆகியோர் பயிற்சியாளராக செயல்படுவார்கள் எனவும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்