நடப்பு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதியது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் இறங்கிய இந்திய அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 240 ரன்கள் எடுத்தனர்.
ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டையும், ஹேசில்வுட், பாட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டையும், ஜம்பா, மேக்ஸ்வெல் தலா 1 விக்கெட்டையும் பறித்தனர். 241 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 47 ரன்களுக்கு மூன்று விக்கெட் அடுத்தடுத்து பறிகொடுத்தனர். பின்னர் டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லாபுஷாக்னே ஆகியோர் கூட்டணியில் 192 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றிபெற செய்தனர்.
இறுதியாக ஆஸ்திரேலிய அணி 43 ஓவரில் 241 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் பும்ரா 2 விக்கெட்டையும், ஷமி, சிராஜ் தலா 1 விக்கெட்டை பறித்தனர். இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா அணி ஆறாவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது.
இந்நிலையில், ஒருபுறம் இந்திய அணி கோப்பை கைப்பற்றாமல் தோல்வியடைந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனால் தங்களது ஆதங்கத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வந்தனர். மறுபுறம் மிட்செல் மார்ஷ் செயல் சோகத்தில் இருந்து ரசிகர்களுக்கு இன்னும் கொந்தளிப்பு ஏற்படுத்தியுள்ளது.
ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் உலகக்கோப்பைக்கு மேல் தனது கால்களை வைத்து இருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. கேப்டன் பாட் கம்மின்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த புகைப்படத்தை பகிந்து இருந்தார். இது நெறிமுறைகளுக்கு எதிரானது என்பதால் ஐசிசி தலையிடுமாறு பல இந்திய ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் கேட்டுக்கொண்டு வருகின்றனர்.
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…