இலங்கை மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடி வருகின்றனர்.இந்த இரு அணிகளும் முதலில் டி20 போட்டியில் விளையாடி வருகின்றனர். முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் நேற்று இரண்டாவது போட்டி சிட்னியில் உள்ள வடக்கு சிட்னி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 8 விக்கெட்டை இழந்து 84 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் 85 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 9.4 ஓவரில் 87 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதில் எரின் பர்ன்ஸ் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீராங்கனை அலிஸா ஹீலி தனது 100-வது சர்வேதேச டி 20 போட்டியில் நேற்று விளையாடினர். இப்போட்டிக்கு முன் அலிஸா ஹீலிவின் கணவரும் , ஆஸ்திரேலிய ஆண்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளரும் ஆன மிட்ச் ஸ்டார்க்.
100-வது சர்வேதேச டி 20 போட்டியில் விளையாடும் தன் மனைவிக்கு கைகொடுத்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். மேலும் அலிஸா ஹீலி தாயும் கட்டிப்பிடித்து தனது வாழ்த்தை தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…