100-வது சர்வேதேச போட்டியில் விளையாடிய மனைவிக்கு வாழ்த்து கூறிய மிட்ச் ஸ்டார்க்..!

Default Image

இலங்கை மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடி வருகின்றனர்.இந்த இரு அணிகளும் முதலில் டி20 போட்டியில் விளையாடி வருகின்றனர். முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் நேற்று  இரண்டாவது போட்டி சிட்னியில் உள்ள வடக்கு சிட்னி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில்  முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி  8 விக்கெட்டை இழந்து 84 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் 85 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 9.4 ஓவரில் 87 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதில் எரின் பர்ன்ஸ் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இப்போட்டியில்  ஆஸ்திரேலிய அணி வீராங்கனை அலிஸா ஹீலி தனது 100-வது சர்வேதேச டி 20 போட்டியில் நேற்று விளையாடினர். இப்போட்டிக்கு முன் அலிஸா ஹீலிவின் கணவரும் ,  ஆஸ்திரேலிய ஆண்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளரும் ஆன மிட்ச் ஸ்டார்க்.
100-வது சர்வேதேச டி 20 போட்டியில் விளையாடும் தன் மனைவிக்கு கைகொடுத்து  வாழ்த்துக்கள் தெரிவித்தார். மேலும் அலிஸா ஹீலி தாயும் கட்டிப்பிடித்து தனது வாழ்த்தை தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Wayanad By polls
congress win karnataka 2024
Priyanka Gandhi - Wayanad
Eknath Shinde - Aaditya Thackeray
rain tn
Sorgavaasal Trailer