காணாமல் போன பெண் கிரிக்கெட் வீராங்கனை ராஜஸ்ரீ ஸ்வைன் ஒடிசா வனப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
ஒடிசாவின் புவனேஸ்வரில் காணாமல் போனதாக காவல் துறையினரால் தேடப்பட்டு வரும் பெண் கிரிக்கெட் வீராங்கனையான ராஜஸ்ரீ ஸ்வைன், கட்டாக் நகருக்கு அருகில் உள்ள அடர்ந்த காட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் காணாமல் போனது குறித்து அவரது பயிற்சியாளர் கட்டாக்கில் உள்ள மங்களபாக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பயிற்சியாளர் அளித்த புகாரின் பேரில் தேடுதலில் ஈடுபட்ட காவல்துறையினர் அதாகர் பகுதியில் உள்ள குருதிஜாதியா வனப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ராஜஸ்ரீ ஸ்வைனை சடலமாய் மீட்டனர். அவரது மரணத்திற்கான காரணத்தை போலீசார் இன்னும் கண்டறியவில்லை. இறந்தவரின் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
இது குறித்து விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர். ஜனவரி 10ஆம் தேதி ஒடிசா மாநில மகளிர் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது. ஆனால் ஸ்வைனின் பெயர் பட்டியலில் இடம் பெறவில்லை. மறுநாள் வீரர்கள் தங்கி (Tangi) பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு பயிற்சிக்காக சென்றனர். ஆனால் ராஜஸ்ரீ தனது தந்தையை சந்திக்க பூரிக்கு செல்வதாக பயிற்சியாளரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார் என்று போலீசார் மேலும் தெரிவித்தனர்.
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…