20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ‘மைக் டைசன்’! பரபரப்பான குத்துச்சண்டை ..யாருடன்? எப்போது?
முன்னாள் உலக ஹெவி வெயிட் சாம்பியனான மைக் டைசன், யூடியூப்பர் ஜேக்பால் இருவருக்கும் இடையேயான குத்துசண்டை போட்டி இன்று நடைபெறவுள்ளது.

டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி வெயிட் சாம்பியனான மைக் டைசனும், பிரபல யூடியூபரான ஜேக் பாலும் மோதுகின்றனர்.
இந்த போட்டியானது இன்று இரவு 8 மணி அளவில் அமெரிக்காவில் உள்ள டெக்சர்ஸ் மாகாணத்தில் எர்லிங்டன் நகரில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி நாளை காலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. மைக் டைசன் இதுவரை தனது குத்துச் சண்டை வரலாற்றில் 58 போட்டியில் விளையாடி 50 போட்டியில் வெற்றி கண்டுள்ளார். இதில் 44 போட்டியில் எதிரணி வீரரை ‘நாக்-அவுட்’ முறையில் வீழ்த்தி இருக்கிறார்.
வெறும் 6 போட்டியில் மட்டும் தான் தோல்வியடைந்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த யூட்யூபர் ஜேக்பால் கடந்த 2013 முதல் இந்த தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறார். இதுவரை விளையாடிய 11 போட்டிகளில், 10 போட்டியில் வெற்றி பெற்றார். அதிலும், 7 முறை ‘நாக்-அவுட்’ முறையில் வெற்றி பெற்றுள்ளார்.
மேலும், பல சிக்கல்களைச் சந்தித்தால் தொடர்ந்து விளையாட முடியாமல் போன மைக் டைசன் தற்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் குத்துச் சண்டை போட்டியில் விளையாடவுள்ளார். இதன் காரணமாக இந்த போட்டிக்கு எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?
February 26, 2025
AFG vs ENG: இந்த டார்கெட்டை அடிச்சு காமிங்க! சதம் விளாசி இங்கிலாந்துக்கு பெரிய இலக்கு வைத்த இப்ராஹிம்!
February 26, 2025
முதல்ல அரசியல் நாகரிகத்தை கத்துக்கோங்க! விஜய்க்கு CPI மாநில செயலாளர் முத்தரசன் அட்வைஸ்!
February 26, 2025
இப்படியா விளையாடுவீங்க? பாகிஸ்தானை விளாசி தள்ளிய ஷோயிப் அக்தர்!
February 26, 2025