மெஸ்ஸி தங்கிய அறை, அருங்காட்சியகமாக மாற்றம்- கத்தார் பல்கலைக்கழகம்
கத்தாரில் மெஸ்ஸி தங்கிய அறையை அருங்காட்சியகமாக மாற்ற முடிவு செய்துள்ளதாக கத்தார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கத்தாரில் நடைபெற்ற ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணி, சாம்பியன் பட்டம் வென்றது. இந்த உலகக்கோப்பை தொடர் முழுவதும் அர்ஜென்டினா அணி வீரர்கள் கத்தாரில் தங்கிய அறையைப் பகிர்ந்து கொண்ட கத்தார் பல்கலைக்கழகம் மெஸ்ஸி தங்கிய அறையை அருங்காட்சியமாக மாற்றப்போவதாக தெரிவித்துள்ளது.
லியோனல் மெஸ்ஸி, இந்த உலகக்கோப்பை தொடரில் அதிகபட்ச கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் 7 கோல் அடித்து 2-வது இடம் பிடித்தார். மெஸ்ஸி, கோல்டன் பால் விருதை இரண்டாவது முறையாக வென்றிருந்தார். இந்த நிலையில் கத்தார் பல்கலைக்கழகம், சமூக வலைதளத்தில் வீடியோவை பகிர்ந்து மெஸ்ஸியின் அறையை மியூசியமாக மாற்றப்போவதாக அறிவித்துள்ளது.
Here’s a quick tour of La Albiceleste’s base camp at Qatar University!
The room where the Argentinian captain, Lionel Messi, stayed in during the World Cup will also be turned into a mini museum soon!#Qatar #ARG #Argentina #Qatar2022 #FIFAWorldCup #LaAlbiceleste #LionelMessi pic.twitter.com/0UsdkBvcdX
— The Peninsula Qatar (@PeninsulaQatar) December 27, 2022