மெஸ்ஸியின் ஓய்வு முடிவு – ரசிகர்கள் அதிர்ச்சி!!!
கத்தார் இல் நடைபெறும் ஃபிஃபா(FIFA) உலகக்கோப்பையுடன் மெஸ்ஸி, ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருக்கிறார்.
அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி, இந்தாண்டு கத்தார் இல் நடைபெறும் ஃபிஃபா(FIFA) உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். மெஸ்ஸியின் ஓய்வு முடிவால் உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இது குறித்து மெஸ்ஸி கூறியதாவது, நான் உலகக்கோப்பை தொடருக்கான நாள்களை எண்ணிக்கொண்டிருக்கிறேன். உண்மையை சொல்லவேண்டும் என்றல் சிறிது மன அழுத்தமாகவும் இருக்கிறது. மேலும் இந்த உலகக்கோப்பை தொடர் தான் தன்னுடைய கடைசி தொடர் என்றும் அவர் கூறியுள்ளார்.
2005 ஆம் ஆண்டு அறிமுகமான 35 வயதான மெஸ்ஸி 164 சர்வதேச போட்டிகளில் விளையாடி 90 கோல்களை அடித்துள்ளார். இதுவரை 4 உலகக்கோப்பை தொடர்களில் பங்கேற்றுள்ள மெஸ்ஸி, ஒருமுறை கூட உலகக்கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2014 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் அர்ஜென்டினா அணி ஜெர்மனியுடன் இறுதிப்போட்டியில் மோதியது. மெஸ்ஸியின் அந்த உலகக்கோப்பை அவ்வளவு எளிதாக யாரும் மறந்து விட முடியாது, இருந்தும் ஜெர்மனி அந்த போட்டியில் அர்ஜென்டினாவை வென்றிருந்தது.
மேலும் மெஸ்ஸி, உலகக்கோப்பை தொடருக்கு தன்னால் காத்திருக்க முடியாது என்றும் உலகக்கோப்பையை எதிர்நோக்கி இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த உலகக்கோப்பை தொடர் தனக்கு நல்லதாக அமையும் என்றும் நம்புகிறேன் என்றும் மெஸ்ஸி கூறியுள்ளார்.