FIFA WC 22:மெஸ்ஸியின் 1000 வது போட்டி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2-1 அர்ஜென்டினா அசத்தல் வெற்றி காலியிறுதிக்கு முன்னேற்றம்
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஃபிஃபா உலகக் கோப்பை 2022 இன் கடைசி 16 வது சுற்றில் அர்ஜென்டினாவை 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேற்றம்.
இப்போட்டியானது லியோனல் மெஸ்ஸி க்கு 1000வது போட்டி என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதை பூர்த்திசெய்யும் விதமாக முதல் பாதியில் லியோனல் மெஸ்ஸி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது முதல் கோலை அடிக்க 2 வது பாதியில் ஜூலியன் அல்வாரெஸ் தனது பங்கிற்கு ஒன்று அடிக்க 2 கோல்கள் என முன்னிலை பெற்று இருந்த நிலையில் ஆஸ்திரேலியா இரண்டாவது பாதியில் 1 கோல் அடித்து போராடினாலும் வெற்றி வாய்ப்பை இழந்தது .
இறுதியில் அர்ஜென்டினா அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.இதற்கு முன்னதாக நேற்று நடைபெற்ற 16 வது சுற்றில் நெதர்லாந்து அமெரிக்காவிற்கு எதிராக 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.அடுத்த வாரம் நடக்க இருக்கும் காலியிறுதியில் அர்ஜென்டினா நெதர்லாந்தை எதிர்கொள்ள இருக்கிறது.
Argentina secure their spot in the Quarter-finals! ????@adidasfootball | #FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) December 3, 2022