மெஸ்ஸி பார்சிலோனா கிளப் அணியிலிருந்து விலகுவதாக தகவல்.!
பிரபல கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி தான் விளையாடும் பார்சிலோனா கிளப் அணியிலிருந்து விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரர் லியோனெல் மெஸ்ஸி, பார்சிலோனா கால்பந்து க்ளப் அணியுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இது குறித்து பார்சிலோனா அணி நிர்வாகத்துக்கு மெஸ்ஸி தகவல் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஜூன் மாத்துடம் பார்சிலோனா உடனான ஒப்பந்தமானது முடிவடைந்துவிட்டது, ஆனால், ஒப்பந்த விதிகள்படி, 2021 ஆம் ஆண்டு சீசன் இறுதி வரை மெஸ்ஸி, பார்சிலோனாவுக்காக விளையாட வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
சாம்பியன்ஸ் லீக்கின் காலிறுதி போட்டி கடந்த 16-ம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில், பார்சிலோனா, முனிச்சிடம் 2-8 என்ற கணக்கில் தோல்வியடைந்தது என்பது குறிப்பித்ததக்கது.