மெஸ்ஸி, எமிலியானோவை அனுமதித்திருக்க கூடாது! இது அருவருப்பானது- மோர்கன்

Default Image

எம்பாப்பேவை கேலி செய்ய எமிலியானோவை, மெஸ்ஸி ஏன் அனுமதிக்கிறார் என்று மோர்கன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி பிரான்ஸை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் ஆனது. கோப்பையை வென்ற கையோடு திரும்பிய அர்ஜென்டினா அணி வீரர்களுக்கு அந்நாட்டு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த நிலையில் அர்ஜென்டினா கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ், பிரான்ஸ் அணி வீரர் கைலியன் எம்பாப்பேவின் முகத்துடன் கூடிய குழந்தை பொம்மையை கையில் வைத்திருக்கும் புகைப்படத்தை பார்த்த பிரபல பிரிட்டிஷ் ஊடகவியலாளர் பியர்ஸ் மோர்கன், இது மிகவும் அருவருப்பானது மற்றும் முறையற்றது.

“ஏன் லியோனல் மெஸ்ஸி எமிலியானோவை இப்படி எம்பாப்பேவை கேலி செய்ய விடுகிறார்? மெஸ்ஸி எமிலியானோவை அனுமதித்திருக்க கூடாது என்று மோர்கன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் வென்ற பிறகும் அர்ஜென்டினாவின் டிரஸ்ஸிங் ரூம் கொண்டாட்டத்தின் போது எமிலியானோ எம்பாப்பேவை கேலி செய்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்