#FIFA2022: லியோனல் மெஸ்ஸியின் பெனால்டியால் ஈக்வடாரை வீழ்த்திய அர்ஜென்டினா

Published by
Castro Murugan

வியாழக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை தகுதிப் போட்டியில் ஈக்வடார் அணியை  1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றி பெற்றது.

2022 இல்  நடைபெறவிருக்கும்  ஃபிஃபா(FIFA) உலகக் கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றனர்.இதில் ஈக்வடார் மற்றும் அர்ஜென்டினா க்கு இடையேயான தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது.இதில் நட்சத்திர ஆட்டக்காரரான லியோனல் மெஸ்ஸி 13 வது நிமிடத்தில் அடித்த பெனால்டி அர்ஜென்டினா வெற்றிக்கு வழிவகுத்தது .

இதனைத்தொடர்ந்து வெற்றிக்கு பின்னர் பேசிய மெஸ்ஸி  “ஒரு வெற்றியைத் தொடங்குவது முக்கியமானது, ஏனென்றால் தகுதியான வீரர்கள் எவ்வளவு கடினமானவர்கள் என்பது எங்களுக்குத் தெரியும், எல்லா போட்டிகளும் இதைப் போலவே கடினமாக இருக்கும்”

இந்த வருடம் உயிர்வாழ்வதற்கு சிக்கலான ஆண்டாக உள்ளது . அர்ஜெண்டினா அணியுடன் மீண்டும்  செல்வதற்கும் விளையாடுவதற்கும் முழு திறனுடன் இருப்பதுடன், வெற்றியைத் தாண்டி மக்களுக்கு மகிழ்ச்சியைத் தர வேண்டும்,ஏனென்றால் இது விளையாட்டிற்கு அப்பாலானது என்று மெஸ்ஸி கூறினார்.

விளையாட்டின் நிலை வித்தியாசமாக இருக்கும் என்று நாங்கள் நம்பினோம், ஏனெனில்  நாங்கள் ஒன்றாக விளையாடி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது, இது எங்கள் முதல் ஆட்டம் மற்றும் பதட்டம் சிக்கலானதாக ஆக்குகிறது” என்று பார்சிலோனா ஸ்ட்ரைக்கர் கூறினார்.

லியோனல் மெஸ்ஸி கடந்த சில மாதங்களாக தனது பார்சிலோனா கிளப் உடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்தார் ,அவரை விலைக்கு வாங்க பல கிளப்கள் போட்டிப்போட்டன.இதற்கு பதில் அளித்த பார்சிலோனா கிளப் மெஸியை வாங்க விரும்பும் கிளப் 700 மில்லியன் டாலரை  செலுத்தினால்  மட்டுமே லியோனல் மெஸ்ஸி பார்சிலோனாவை விட்டு வெளியேற முடியும் என்று அதிரடியாக பதில் அளித்தது.இந்நிலையில் மெஸ்ஸி தனது மோதல் போக்கை விட்டுவிட்டு அணிக்கு திரும்பியுள்ளது கால்பந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Published by
Castro Murugan

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

3 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

3 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

5 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

6 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

8 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

9 hours ago