#FIFA2022: லியோனல் மெஸ்ஸியின் பெனால்டியால் ஈக்வடாரை வீழ்த்திய அர்ஜென்டினா
வியாழக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை தகுதிப் போட்டியில் ஈக்வடார் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றி பெற்றது.
2022 இல் நடைபெறவிருக்கும் ஃபிஃபா(FIFA) உலகக் கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றனர்.இதில் ஈக்வடார் மற்றும் அர்ஜென்டினா க்கு இடையேயான தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது.இதில் நட்சத்திர ஆட்டக்காரரான லியோனல் மெஸ்ஸி 13 வது நிமிடத்தில் அடித்த பெனால்டி அர்ஜென்டினா வெற்றிக்கு வழிவகுத்தது .
இதனைத்தொடர்ந்து வெற்றிக்கு பின்னர் பேசிய மெஸ்ஸி “ஒரு வெற்றியைத் தொடங்குவது முக்கியமானது, ஏனென்றால் தகுதியான வீரர்கள் எவ்வளவு கடினமானவர்கள் என்பது எங்களுக்குத் தெரியும், எல்லா போட்டிகளும் இதைப் போலவே கடினமாக இருக்கும்”
இந்த வருடம் உயிர்வாழ்வதற்கு சிக்கலான ஆண்டாக உள்ளது . அர்ஜெண்டினா அணியுடன் மீண்டும் செல்வதற்கும் விளையாடுவதற்கும் முழு திறனுடன் இருப்பதுடன், வெற்றியைத் தாண்டி மக்களுக்கு மகிழ்ச்சியைத் தர வேண்டும்,ஏனென்றால் இது விளையாட்டிற்கு அப்பாலானது என்று மெஸ்ஸி கூறினார்.
விளையாட்டின் நிலை வித்தியாசமாக இருக்கும் என்று நாங்கள் நம்பினோம், ஏனெனில் நாங்கள் ஒன்றாக விளையாடி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது, இது எங்கள் முதல் ஆட்டம் மற்றும் பதட்டம் சிக்கலானதாக ஆக்குகிறது” என்று பார்சிலோனா ஸ்ட்ரைக்கர் கூறினார்.
லியோனல் மெஸ்ஸி கடந்த சில மாதங்களாக தனது பார்சிலோனா கிளப் உடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்தார் ,அவரை விலைக்கு வாங்க பல கிளப்கள் போட்டிப்போட்டன.இதற்கு பதில் அளித்த பார்சிலோனா கிளப் மெஸியை வாங்க விரும்பும் கிளப் 700 மில்லியன் டாலரை செலுத்தினால் மட்டுமே லியோனல் மெஸ்ஸி பார்சிலோனாவை விட்டு வெளியேற முடியும் என்று அதிரடியாக பதில் அளித்தது.இந்நிலையில் மெஸ்ஸி தனது மோதல் போக்கை விட்டுவிட்டு அணிக்கு திரும்பியுள்ளது கால்பந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.