ஃபிஃபா உலகக் கோப்பையில் மெஸ்ஸி, படைத்த பல்வேறு சாதனைகள்!
ஃபிஃபா உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் விளையாடியதன் மூலம் மெஸ்ஸி பல சாதனைகளை படைத்துள்ளார்.
கத்தாரில் நடந்த ஃபிஃபா 2022 கால்பந்து உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் நேற்று அர்ஜென்டினா அணி, பிரான்ஸை வீழ்த்தி இந்த உலககோப்பையின் சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரில் லியோனல் மெஸ்ஸி, பல சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார்.
மெஸ்ஸி அதிக உலககோப்பைகளில் பங்கேற்று அதாவது 26, ஃபிஃபா உலகக் கோப்பைகளில் பங்கேற்ற முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். மேலும் 19 உலகக் கோப்பை போட்டிகளில் கேப்டனாக இருந்து புது உலக சாதனை படைத்துள்ளார்.
உலகக்கோப்பை வரலாற்றில் அதிகபட்சமாக 2,314 நிமிடங்கள் களத்தில் விளையாடி வரலாற்று சாதனை படைத்த மெஸ்ஸி, 5 உலககோப்பைகளில் பங்கேற்று கோல் அடிக்க உதவிய முதல் வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். மேலும் உலகக் கோப்பையில் அதிகமுறை (11) ஆட்டநாயகன் விருதுகளை வென்றவர் மெஸ்ஸி தான் என்பதில் சந்தேகமில்லை.