Leagues Cup Champion:மெஸ்ஸி தலைமையிலான இன்டர் மியாமி அணி லீக்ஸ் கோப்பையை வென்றது !
இந்த ஆண்டிற்கான லீக்ஸ் கோப்பை போட்டிகள் வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் மெஸ்ஸி தலைமையிலான அமெரிக்க கிளப்பான இன்டர் மியாமி அணி மற்றும் நாஷ்வில்லி அணிகளுக்கு க்கு இடையே நடைபெற்ற இறுதிப்போட்டியில் இன்டர் மியாமி அணி பெனால்டி சூட்டில் வெற்றி பெற்று லீக்ஸ் கோப்பையை கைப்பற்றியுள்ளது.
முதல் பாதியின் 23 வது நிமிடத்தில் மெஸ்ஸி அற்புதமான கோலை அடிக்க முன்னிலை பெற்றது இன்டர் மியாமி அணி.ஆனால் இரண்டாம் பாதியில் நாஷ்வில்லி அணியின் ஃபாஃபா 57 வது நிமிடத்தில் கோல் அடிக்க ஆட்டம் சமமானது.
இரண்டு அணிகளும் அடுத்த 2 வது கோலை அடித்து முன்னிலை பெற முயற்சித்தது ஆனால் இரு அணிகளின் ஆக்ரோசமான ஆட்டத்தால் முழு ஆட்டநேர முடிந்த பின்னர் கொடுக்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் யாரும் கோல் அடிக்காததால் 1-1 என சமனில் ஆட்டம் முடிந்தது.
இதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட பெனால்டி சூட்டில் 9-10 என்ற கணக்கில் மெஸ்ஸி தலைமையிலான இன்டர் மியாமி த்ரில் வெற்றி பெற்று லீக்ஸ் கோப்பையை வென்றுள்ளது.