உலக கால்பந்து பிரபலம் லியோனல் மெஸ்ஸி, இன்டர் மியாமி கிளப்பில் இணைவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து பிரபலம் லியோனல் மெஸ்ஸி, அமெரிக்காவின் இன்டர் மியாமி கால்பந்து கிளப்பில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், தற்பொழுது இன்டர் மியாமி அதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து இன்டர் மியாமி கிளப் தனது ட்விட்டர் பக்கத்தில், வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
இண்டர் மியாமிக்காக விளையாடும் லியோனல் மெஸ்ஸியின் முடிவு குறித்து பார்சிலோனாவின் கால்பந்து அணி அதிகாரப்பூர்வ அறிக்கை அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. மேலும், சமீபத்தில் தான், லியோனல் மெஸ்ஸியின், பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப் உடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது.
மெஸ்ஸி கடந்த 2021-இல் ஏழாவது முறையாக உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான பலோன் டி’ஓர் (Ballon d Or) விருதையும் வென்றார். பின், ஆகஸ்ட் (2021-இல்) பார்சிலோனா கால்பந்து கிளப்பிலிருந்து பாரிஸ் செயிண்ட் ஜெர்மைனில்(பிஎஸ்ஜி) சேர்ந்தார். 35 வயதான மெஸ்ஸி பிஎஸ்ஜி அணிக்காக 71 போட்டிகளில் விளையாடி, அதில் 31 கோல்களை அடித்துள்ளார்.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…