ரொனால்டோவின் லா லிகா ஹாட்ரிக் சாதனையை முறியடித்த மெஸ்ஸி..!
- மெஸ்சி இப்போட்டியில் “ஹாட்ரிக்” கோல் அடித்தார்.
- லா லிகா கால்பந்து வரலாற்றில் அதிக “ஹாட்ரிக்” கோல் அடித்த வீரர் சாதனையை படைத்து உள்ளார்.
ஸ்பெயினில் தற்போது கிளப் அணிகளுக்கான லா லிகா கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த போட்டியில் பார்சிலோனா அணி , மல்லோர்கா அணியும் மோதியது.
இப்போட்டியில் பார்சிலோனா அணி 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பார்சிலோனா வீரர் லூயிஸ் சுவாரஸ் 43-வது நிமிடத்தில் பின்வாக்கில் உதைத்த பந்து கோலுக்குள் சென்றதை பார்த்து ரசிகர்கள் வியந்து போனார்.
இந்நிலையில் பார்சிலோனா முன்னணி வீரர் லயோனல் மெஸ்சி “ஹாட்ரிக்” கோல் அடித்தார். இது மெஸ்சிக்கு 35-வது “ஹாட்ரிக் கோல்” ஆகும். இதன் மூலம் லா லிகா கால்பந்து வரலாற்றில் அதிக “ஹாட்ரிக்” கோல் அடித்த வீரர் சாதனையை படைத்தார்.
இதற்கு முன் இந்த சாதனை முன்னாள் வீரர் கிறிஸ்டியானா ரொனல்டோ 34 “ஹாட்ரிக் கோல்” அடித்து முதலிடத்தில் இருந்தார். தற்போது ரொனல்டோ சாதனையை முறியடித்து மெஸ்சி முதலிடத்தில் உள்ளார்.