இரட்டை சதம் அடித்த மயங்க் அகர்வால்..! கதறும் தென்னாபிரிக்கா பந்து வீச்சாளர்கள்..!
இந்தியா , தென்னாபிரிக்கா இடையே மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினதில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் தொடங்கியது.
இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி நேற்றைய ஆட்ட முடிவில் விக்கெட்டை இழக்காமல் 202 ரன்கள் எடுத்தது. இதை தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 389 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை கொடுத்து விளையாடி வருகிறது.
இந்திய அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரரான மாயங்க் அகர்வால் இரட்டை சதம் விளாசி உள்ளார். சிறப்பாக விளையாடி வந்த மாயங்க் அகர்வால் 204 பந்தில் 13 பவுண்டரி , 2 சிக்ஸர் உடன் சதம் அடித்தார்.இதை தொடர்ந்து விளையாடிய மாயங்க் அகர்வால் 358 பந்தில் 22பவுண்டரி , 5 சிக்ஸர் என 200 ரன்கள் அடித்தார்.
களத்தில் மாயங்க் அகர்வால் 209 ,ரஹானே 15 ரன்னுடன் விளையாடி வருகின்றனர்.இந்திய அணி 3 விக்கெட்டை இழந்து 430 ரன்கள் எடுத்து உள்ளது.