இந்திய அணி வருகின்ற 2021-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளனர். இந்த தொடரில் 2 டெஸ்ட் போட்டிகளை பகல்-இரவு ஆட்டமாக விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்று பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளனர்.இந்த போட்டி தொடரின்போது பகல்-இரவு டெஸ்ட் போட்டி குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் இந்திய கிரிக்கெட் நிர்வாகிகளுடன்பேச உள்ளனர்.
சமீபத்தில் இந்திய அணி முதல் முறையாக கொல்கத்தாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணியுடன் பகல்-இரவு போட்டியில் விளையாடி வெற்றி பெற்றது. இதனால் ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி பகல்-இரவு போட்டியில் விளையாட வாய்ப்பு உள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி சில நாள்களுக்கு முன் அளித்த ஒரு பேட்டியில், ஒவ்வொரு டெஸ்ட் தொடரிலும் ஒரு பகல்-இரவு போட்டியில் விளையாடலாம் என கூறி இருந்தார்.
ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி 2 பகல்-இரவு போட்டியில் விளையாடுமா..?என கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக எதுவும் கேட்கவில்லை. ஒரு தொடரில் இரண்டு பகல்-இரவு போட்டி என்பது அதிகம். ஒரு தொடரில் ஒரு போட்டியில் விளையாடலாம் என கூறினார்.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…