டோக்கியோவில் இன்று நடைபெற்ற ஒலிம்பிக் குத்துச்சண்டை மகளிர் 48 – 51 கிலோ எடை பிரிவில் மேரிகோம்,கொலம்பியாவின் விக்டோரியாவிடம் தொல்வியுற்றார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற நடைபெற்ற மகளிர் குத்துசண்டை போட்டியில் 51 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் மேரிகோம், டொமினிகா குடியரசின் மிக்குவேலினாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.இதன்மூலம்,முதல் சுற்றில் வெற்றி பெற்றதன் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்தியாவின் மேரிகோம் தகுதி பெற்றார்.
இந்நிலையில்,இன்று நடைபெற்ற 48 – 51 கிலோ எடை பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மேரி கோம்,கொலம்பியாவின் இங்க்ரிட் வாலென்சியா விக்டோரியாவை எதிர்கொண்டார்.இப்போட்டியில்,மேரி கோம் தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தினார்.இருப்பினும்,3-2 என்ற கணக்கில் மேரி கோமை வீழ்த்தி விக்டோரியா வெற்றி பெற்றுள்ளார்.இதனால்,மேரி கோம் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் விக்டோரியா வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
ஆனால்,மேரி கோம் கடந்த மே 21 ம் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப்பில் ஒரு வெள்ளியை வென்றதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தேர்வு செய்யப்பட்டார்.மேலும்,மேரி கோம் 6 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனா : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…