நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய மலிங்கா..!
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து லசித் மலிங்கா விலகினார்.
ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், இந்தாண்டு ஐபிஎல் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 -ம் தேதி முதல் நடைபெறும் என ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல், கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்துள்ளார்.
இதனால், இந்த தொடரில் பங்கேற்க 8 அணியின் வீரர்கள் அமீரகம் சென்றடைந்து, கட்டாய தனிப்படுத்துதலில் உள்ளனர். இந்நிலையில், இலங்கை அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா தனிப்பட்ட காரணங்களால் இந்த ஆண்டு சீசனில் விளையாட முடியாத நிலையில் இருப்பதாக அணி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.
இதனால், மலிங்காவிற்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணி ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்ஸன் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணி 4-வது முறையாக கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் மலிங்கா என்பது குறிப்பித்தக்கது.