LIVE:டோக்கியோ ஒலிம்பிக்;நெதர்லாந்தை வெல்லுமா?…. இந்திய மகளிர் ஹாக்கி அணி …!
டோக்கியோ ஒலிம்பிக்கில் தற்போது நடைபெற்று வரும் மகளிர் ஹாக்கி போட்டியில் நெதர்லாந்துடன்,இந்திய மகளிர் அணி விளையாடி வருகிறது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமான தொடக்க நிகழ்ச்சிகளுடன் நேற்று அதிகாரப்பூா்வமாகத் தொடங்கிய நிலையில், இன்று பல்வேறு தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இந்தியா பங்கேற்பு:
அதன்படி, மகளிர் பளுதூக்குதல் 49 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றார்.துப்பாக்கி சுடுதல் போட்டியில், சவுரப் சவுத்ரி மட்டுமே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார், ஆனால்,அவர் 10 மீ ஏர் பிஸ்டலில் 7 வது இடத்தைப் பிடித்ததால் பதக்கத்தை இழந்தார்.
டேபிள் டென்னிஸில், மகளிர் ஒற்றையர் பிரிவில், மாணிக்க பத்ரா மற்றும் சுதிர்தா முகர்ஜி இருவரும் வெற்றிகளைப் பதிவு செய்தனர்.டென்னிஸில் சுமித் நாகல் இந்தியாவுக்காக முதல் ஒற்றையர் வெற்றியைப் பதிவு செய்தார்.மேலும்,ஹாக்கியில்,ஆண்கள் அணி வென்றது .
இந்தியா vs நெதர்லாந்து மோதல்:
இந்நிலையில்,மகளிர் ஹாக்கி அணி தற்போது நெதர்லாந்து அணியுடன் விளையாடி வருகிறது.மேலும்,போட்டியின் ஆறாவது நிமிடத்தில் நெதர்லாந்து அணி கோல் அடித்து முன்னிலை வகித்தது.
இதனையடுத்து,10 வது நிமிடத்தில் ராணி ராம்பால் அடித்த ஒரு சூப்பர் கார்னர் கோலால் முதல் ரவுண்டின் முடிவில் 1-1 என்ற விகிதத்தில் சமநிலையில் இருந்தன.
End of Q1: ???????? 1:1 ????????
Quite a start to #Tokyo2020 for the #IndianEves!#NEDvIND #HaiTayyar #IndiaKaGame #TokyoTogether #StrongerTogether #HockeyInvites #WeAreTeamIndia
— Hockey India (@TheHockeyIndia) July 24, 2021
இதனையடுத்து ,இரண்டாவது ரவுண்டு முடிவிலும் இரு அணிகள் எந்த கோல்களும் அடிக்காததால் 1-1 என்ற விகிதத்தில் சமநிலையிலே இருந்தன.
இறுதியாக,நெதர்லாந்து 33 வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் கோல் அடிக்க தற்போது 1-2 என்ற கணக்கில் நெதர்லாந்து முன்னிலையில் உள்ளது.
இந்தியா லெவன்:கோச் – எஸ். மரிஜ்னே:
சவிதா புனியா(GK), டீப் கிரேஸ் எக்கா, குர்ஜித் கவுர், உடிதா, நேஹா கோயல், சுஷிலா சானு புக்ராம்பம், மோனிகா மாலிக், சலீமா டெட்டே, ராணி ராம்பல்(c), நவ்னீத் கவுர், வந்தனா கட்டாரியா.
This is how the #IndianEves line up for their first match of #Tokyo2020. ????????
Any score predictions ahead of the match? ????#NEDvIND #HaiTayyar #IndiaKaGame #TokyoTogether #Cheer4India #HockeyInvites #WeAreTeamIndia #Hockey pic.twitter.com/CkjdoZiTY2
— Hockey India (@TheHockeyIndia) July 24, 2021
நெதர்லாந்து லெவன் – கோச்- ஏ. அன்னன்:
ஜோசின் கோனிங், கியா வான் மாசக்கர், பியான் சாண்டர்ஸ், லாரன் ஸ்டாம், லாரியன் லியூரிங்க், மார்லோஸ் கீட்டல்ஸ், லாரா நன்னின்க், ஈவா டி கோய்டே, மரியா வெர்சூர், லிட்விஜ் வெல்டன், ஃப்ரெடெரிக் மாட்லா.