ஒருமுறை அல்ல,6 முறை ! மீண்டும் தங்க ஷூவை வென்று சாதனை படைத்த மெஸ்சி

Published by
Venu

லயனோல் மெஸ்சி 6 தங்க ஷூவை வென்று சாதனை படைத்துள்ளார்.
லயனோல் மெஸ்சி உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் ஆவார். அர்ஜென்டினா அணி கேப்டனான இவர், ஸ்பெயின் கால்பந்து கிளப் அணியான பார்சிலோனாவிற்காக விளையாடி வருகிறார். பார்சிலோனா அணிக்கு ஏராளமான சாம்பியன் பட்டங்களை வென்று கொடுத்துள்ள மெஸ்சி, விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து  போட்டியில் தங்க ஷூ ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து லீக்கில் யார் அதிக எண்ணிக்கையில் கோல் அடிக்கிறார்களோ, அவர்களுக்கு ஆண்டுதோறும் இந்த தங்க ஷூ வழங்கப்படும்.

அந்தவகையில் இந்த ஆண்டு நட்சத்திர வீரர் மெஸ்சி 2018-19 சீசனில் பார்சிலோனா அணிக்காக விளையாடி 34 கோல்கள் அடித்து முதல் இடம் பிடித்துள்ளார்.எனவே இந்த ஆண்டு மெஸ்சிக்கு தங்க ஷூ வழங்கப்பட்டுள்ளது.இதனுடன் சேர்த்து மெஸ்சி 6 தங்க ஷூவை வென்று சாதனை படைத்துள்ளார். மேலும், தொடர்ச்சியாக மூன்று முறை வென்றுள்ளார். மற்றொரு நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒட்டுமொத்தமாக 4-முறை தங்க ஷூவை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

18 நாட்கள் 36 கதாபாத்திரங்கள்.. நாளை முதல் மோகன் லால் நடிக்கும் ‘எம்புரான்’ படத்தின் அப்டேட்.!

கேரளா : நடிகரும் இயக்குனருமான பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன் லால், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘எம்புரான்' படத்தின் கதாபாத்திரங்களை…

8 minutes ago

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! கெஜ்ரிவால் தோல்வி., மணீஷ் சிசோடியா தோல்வி!

டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற  டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே…

22 minutes ago

ஈரோடு இடைத்தேர்தல்.. நாதகவை பின்னுக்கு தள்ளி முன்னுக்கு வந்த நோட்டா.!

ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை…

39 minutes ago

விராட் வெளியே., ஸ்ரேயாஸ் உள்ளே! இது கடவுளின் விருப்பம்! ஹர்பஜன் சிங் கருத்து!

ஷார்ஜா : இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி…

1 hour ago

ஒரு கேப்டனாக பாடம் கற்றுக்கொண்ட ரஷீத் கான்… தாக்கத்தை ஏற்படுத்திய அமெரிக்க இணைய தொடர்.!

ஜோகன்னஸ்பேர்க் : ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரும், தற்போதைய மும்பை கேப் டவுன் அணியின் கேப்டனுமான ரஷீத் கான், நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பப்படும்…

1 hour ago

டெல்லி நிலவரம்., எச்சரிக்கை! I.N.D.I.A தலைவர்கள் ஈகோ-வை விட்டுவிட வேண்டும்! திருமா அட்வைஸ்!

மதுரை : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல், ஈரோடு கிழக்கு மற்றும் உ.பியில் மில்கிபூர்…

2 hours ago