ஒருமுறை அல்ல,6 முறை ! மீண்டும் தங்க ஷூவை வென்று சாதனை படைத்த மெஸ்சி
லயனோல் மெஸ்சி 6 தங்க ஷூவை வென்று சாதனை படைத்துள்ளார்.
லயனோல் மெஸ்சி உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் ஆவார். அர்ஜென்டினா அணி கேப்டனான இவர், ஸ்பெயின் கால்பந்து கிளப் அணியான பார்சிலோனாவிற்காக விளையாடி வருகிறார். பார்சிலோனா அணிக்கு ஏராளமான சாம்பியன் பட்டங்களை வென்று கொடுத்துள்ள மெஸ்சி, விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து போட்டியில் தங்க ஷூ ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து லீக்கில் யார் அதிக எண்ணிக்கையில் கோல் அடிக்கிறார்களோ, அவர்களுக்கு ஆண்டுதோறும் இந்த தங்க ஷூ வழங்கப்படும்.
அந்தவகையில் இந்த ஆண்டு நட்சத்திர வீரர் மெஸ்சி 2018-19 சீசனில் பார்சிலோனா அணிக்காக விளையாடி 34 கோல்கள் அடித்து முதல் இடம் பிடித்துள்ளார்.எனவே இந்த ஆண்டு மெஸ்சிக்கு தங்க ஷூ வழங்கப்பட்டுள்ளது.இதனுடன் சேர்த்து மெஸ்சி 6 தங்க ஷூவை வென்று சாதனை படைத்துள்ளார். மேலும், தொடர்ச்சியாக மூன்று முறை வென்றுள்ளார். மற்றொரு நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒட்டுமொத்தமாக 4-முறை தங்க ஷூவை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.