உலகக் கோப்பை தகுதிப் போட்டியில் பொலிவியாவுக்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்ததன் மூலம் பிரேசில் ஜாம்பவான் பெலேயின் சாதனையை லியோனல் மெஸ்ஸி முறியடித்துள்ளார்.
பார்சிலோனா (Barcelona) கால்பந்து அணிக்காக ஆடி வந்த நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, சமீபத்தில் அந்த அணியில் இருந்து விலகி,பாரிஸ் செய்ண்ட் ஜெர்மன்(PSG) அணியில் இணைந்துள்ளார். அவருக்கான ஆண்டு ஊதியமாக சுமார் ரூ.200 கோடி பேசப்பட்டு, முதற்கட்டமாக 2 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியது.
இதற்கிடையில்,அடுத்த் ஆண்டு நடைபெறவுள்ள FIFA கால்பந்து உலக கோப்பைக்கான தகுதிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில்,நேற்று நடைபெற்ற 2022 உலகக் கோப்பை தகுதிப் போட்டியில் பொலிவியாவுக்கு எதிராக ஹாட்ரிக் கோல் (77,78,79) அடித்ததன் மூலம் பிரேசில் ஜாம்பவான் பெலேயின் சாதனையை லியோனல் மெஸ்ஸி முறியடித்துள்ளார். ஏனெனில்,பெலே இதுவரை 77 கோல்கள் அடித்த நிலையில்,தற்போது அந்த சாதனையை மெஸ்ஸி முறியடித்துள்ளார்.
குறிப்பாக,லியோனல் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் அடித்து பெலேயை பின்னுக்குத் தள்ளி, தென் அமெரிக்க கால்பந்து வரலாற்றில் சர்வதேச கோல் அடித்த முதல் வீரராக சாதனை படைத்துள்ளார்.மேலும்,இந்த உலகக் கோப்பை தகுதிப் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் பின்னர் ஊடகங்களிடம் பேசிய மெஸ்ஸி, மகிழ்ச்சியில் கண்ணீர் வடிப்பதைக் காண முடிந்தது.
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…