#LaLiga 2024 : லூகா மோட்ரிச் அதிரடியால் ரியல் மாட்ரிட் அணி வெற்றி ..!
உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் தொடர் தான் லாலிகா (LaLiga). இந்த தொடரில் ரியல் மாட்ரிட், பார்சிலோனா போன்ற கிளுப்புகள் நட்சத்திர கிளப்பாக இருந்து வருகிறது. இந்த தொடரின் புள்ளிப்பட்டியலில் ரியல் மாட்ரிட் தற்போது முதலிடத்திலும், பார்சிலோனா அணி இரண்டாம் இடத்திலும் இருந்து வருகிறது.
இந்த தொடரில் நேற்றைய போட்டியாக ரியல் மாட்ரிட் அணிக்கும் செவில்லா அணிக்கும் நடைபெற்றது. இந்த தொடரில் இந்த இரு அணிகளுக்கும் நடக்கும் போட்டியானது ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக அமைந்திருக்கும். இது ரியல் மாட்ரிட், பார்சிலோனா அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டிக்கு அடுத்த படியான ரைவெல்ரி (Rivalry) ஆகும்.
Read More : – #WPL : 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி ..!
நேற்று நடந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளுக்கும் இடையே விறுவிறுப்பு சற்று அதிகமாவே இருந்தது. இரு அணிகளுக்கும் கிடைத்த பல வாய்ப்புகளையும், பிரீ கிக் வாய்ப்புகளையும் தவற விட்டனர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியானது 0-0 என்ற கணக்கில் முடிவடைந்தது. அதன் பின், ஆட்டத்தின் இரண்டாம் பாதியிலும் விறுவிறுப்பு கொஞ்சம் கூட குறையாமல் காணப்பட்டது.
இந்நிலையில், ஆட்டத்தின் 81 -வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரரான லூகா மோட்ரிச் அபாரமாக பந்தை கோல் அடித்து ரியல் மாட்ரிட் அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். இதனால், போட்டி முடிவில் ரியல் மாட்ரிட் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ரியல் மாட்ரிட் அணி புள்ளிப்பட்டியலில் 65 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.