இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீரரும், 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவருமான லக்ஷ்யா சென் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஆகியோரிடம், ஜப்பான் மற்றும் சீனா ஓபன்களில் பங்கேற்க விசா பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
22 வயதான லக்ஷ்யா சென் ஜப்பான் விசா கிடைக்காததால் தனது ஏமாற்றத்தை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தினார். லக்ஷ்யா சென் பயிற்சியாளர் மற்றும் பிசியோ உட்பட அவரது அணியில் உள்ள மற்ற இரண்டு உறுப்பினர்கள் தங்கள் விசாவைப் பெறவில்லை என்று கூறினார். நவம்பர் 14 முதல் தொடங்க உள்ள ஜப்பான் மாஸ்டர்ஸ் 2023 இல் பங்கேற்க லக்ஷ்யா சென் நவம்பர் 11, சனிக்கிழமையன்று ஜப்பான் புறப்பட உள்ளார்.
லக்ஷ்யா சென் மற்றும் அவரது குழு அக்டோபர் 10 அன்று விசாவிற்கு விண்ணப்பித்தது ஆனால் இன்னும் அது கிடைக்கவில்லை என்று கூறினார். லக்ஷ்யா சென் தனது கடைசி போட்டியில் கடந்த மாதம் 2023 பிரெஞ்சு ஓபனில் இருந்து முதல் சுற்றிலேயே வெளியேறினார்.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…