பிறந்தநான்று வரலாறு படைத்த குல்தீப் யாதவ்…இவர்தான் முதல் இந்திய சுழற்பந்து வீச்சாளர்…

kuldeep yadav

இந்தியா – தென்னாபிரிக்கா இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில்,  களமிங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 2021 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் சதம் அடித்த நிலையில், இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 60 ரன்கள் எடுத்திருந்தார்.

இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாபிரிக்கா 95 ரங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது இந்தியா. இதில், குறிப்பாக இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் வரலாற்று சாதனை படைத்தார். நேற்று தனது 29வது பிறந்தநாளை கொண்டாடிய குல்தீப் யாதவ், டி20 போட்டிகளில் தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார்.

அதாவது, 2.5 ஓவரில் 17 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதிலும் பிறந்தநாளன்று 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தனக்கு தானே பிறந்தநாளை பரிசை கொடுத்து கொண்டுள்ளார் குல்தீப் யாதவ். பிறந்தநாளன்று குல்தீப் யாதவ் அபாரமாக விளையாடியதால் ரசிகர்கள் பலரும் அவருக்கு பாராட்டுவதோடு வாழ்த்தும் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் டி20 கிரிக்கெட்டில் பிறந்தநாளன்று விளையாடிய வீரர்களில் முதல்முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

நம்பர் 7க்கு ஓய்வு… எம்.எஸ் தோனியை கெளரவித்த பிசிசிஐ!

மேலும், குல்தீப் யாதவ் டி20 போட்டிகளில் இரண்டு ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஆவார். 2018ம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்களில் 24 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த குல்தீப், டி20 போட்டிகளில்  முதல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது இதுதான். ஆனால், பிப்ரவரி 1, 2017 அன்று பெங்களூருவில் இங்கிலாந்துக்கு எதிராக 25 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி டி20 போட்டிகளில் சிறந்த பந்துவீச்சாளர் என்ற சாதனையை யுஸ்வேந்திர சாஹல் பெற்றிருந்தார்.

ஆனால், டி20 போட்டிகளில் மீண்டும் ஐந்து விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை. தற்போது, இரண்டு முறை டி20 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் சுழற்பந்து  வீச்சாளர் குல்தீப் ஆவார். குல்தீப்புக்கு முன் புவனேஷ்வர் குமார் மட்டுமே இந்தியாவுக்காக டி20 போட்டிகளில் இரண்டு ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்