உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார் குகேஷ்! வரலாற்றில் புது சாதனை!

14ஆவது சுற்றில் டிங்லீரெனை வீழ்த்தி தமிழக வீரர் குகேஷ் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

world chess champion gukesh

சிங்கப்பூர் : உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டிகள் தற்போது விறு விறுப்பாக சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லின் இருவரும் விளையாடி வந்தனர்.  இந்த போட்டியில் யார் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை  வெல்லப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பும் அதிகரித்து கொண்டே சென்ற நிலையில், தமிழக வீரர் குகேஷ்  வெற்றிபெற்றுள்ளார்.

14 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் சுற்று போட்டியில் டிங்கும் மூன்றாவது சுற்று போட்டிகள் குகேஷூம் வெற்றி பெற்றனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற 4-வது சுற்றிலிருந்து 10-வது சுற்று வரை சமநிலையிலேயே முடிவடைந்தது. இதனையடுத்து,  11-வது சுற்று வரும் போது மூளைக்கு அதிகமாக வேலை கொடுத்து சிறப்பாக விளையாடிய குகேஷ் வெற்றிபெற்றார்.

அதனை தொடர்ந்து அடுத்த சுற்றான 12-வது சுற்றிலும் வெற்றிபெற்றார். அதன்பின் நேற்று நடைபெற்ற 13-வது சுற்றில் இருவரும் தலா 6.5 என்ற புள்ளியை பெற்றுக்கொண்ட நிலையில், 13-வது சுற்றுமே சமநிலையில் தான் முடிந்தது. எனவே, இருவரும் சமநிலையான புள்ளிகளை பெற்றுள்ள காரணத்தால்  14-வது சுற்றில் வெற்றிபெறுபவர் தான் வெற்றியாளர் எனவும் நேற்று கூறப்பட்டது.

இந்த நிலையில், 14ஆவது சுற்றில் போட்டி தொடங்கி 2 மணி நேரம் முடிவடைந்துள்ள நிலையில் இந்த சுற்றும் டிராவை நோக்கி சென்று கொண்டிருந்த  காரணத்தால் நாளை டை பிரேக்கர் முறைப்படி சுற்று நடைபெறவுள்ளது எனவும் சொல்லப்பட்டது. இந்த சூழலில். 14ஆவது சுற்றில் டிங்லீரெனை வீழ்த்தி தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

தமிழகத்தைச் சேர்ந்த 18 வயது குகேஷ், உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார். இதனையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
vidaamuyarchi ott release date
kaliyammal tvk
anbumani sekar babu
IND vs PAK
dragon movie box office
kaliyammal seeman