உலக செஸ் சாம்பியன்ஷிப் : நடப்பு சாம்பியனை வீழ்த்தி தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் வெற்றி!

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 3ஆவது சுற்றில் நடப்பு சாம்பியன் டிங் லிரைனை வீழ்த்தி தமிழ்நாடு வீரர் குகேஷ் வெற்றி பெற்றுள்ளார்.

world chess championship D'Gukesh

சிங்கப்பூர் : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கியது. இன்று தொடங்கும் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி டிச. 13ம் தேதி வரை 14 சுற்றுகளாக இப்போட்டிகள் நடைபெறுகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய வீரர் குகேஷுடன் நடப்பு சாம்பியன் டிங் லிரேன் மோதுகிறார்கள்.

இந்த போட்டியின் 3ஆவது சுற்றில் தமிழக வீரர் குகேஷ் வெற்றி பெற்றார்.  கிளாசிகல் போட்டிகளில் முதல்முறையாக டிங் லீரனை வீழ்த்தி குகேஷ் சாதனை படைத்துள்ளார்.  மூன்று சுற்றுகள் முடிவில் குகேஷ், லிரன் இருவரும் தலா 1.5 புள்ளிகள் பெற்றுள்ளனர்.

இதற்கு முன், குகேஷும் டிங்கும் மூன்று முறை மட்டுமே கிளாசிக்கல் போட்டியில் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். அதில், இரண்டு போட்டியில் டிங் வென்றார், ஒன்று டிராவாகமுடிந்தது. இதனையடுத்து முதல்முறையாக குகேஷ் கிளாசிகல் போட்டிகளில் டிங் லீரனை வீழ்த்தியிருக்கிறார்.

மேலும், இந்த போட்டியில் வெற்றிக்கு ஒரு புள்ளியும், டிராவுக்கு அரைப் புள்ளியும் வழங்கப்படும். முதலில் 7.5 புள்ளியை எட்டுபவர் சாம்பியன் பட்டத்தை வெல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்