ஜடேஜா வந்தாலும் அஸ்வின் இருக்கனும்! கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேச்சு!

Krishnamachari Srikkanth

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து இருக்கும் நிலையில், அடுத்ததாக இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜனவரி) 3-ஆம் தேதி தேதி ஜோகன்னஸ்பர்க் வாண்டரர்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில் விளையாடுவதற்காக விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், இதற்கு முன்னதாக, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், ரவீந்திர ஜடேஜா அணிக்கு திரும்பி வந்தாலும், இந்தியா ஆடும் லெவன் அணியில் ரவிச்சந்திரன் அஷ்வின் சேர்க்கப்பட வேண்டும் என்றும் ஷர்துல் தாக்கூரை விட அஷ்வின் சிறந்த வீரர் என்றும் வெளிப்படையாகவே தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” என்னை பொறுத்தவரையில் ஷர்துல் தாக்கூரை விட அஸ்வின் சிறந்தவர் என்று நான் நம்புகிறேன் . பேட்டிங்கிலும் சரி பந்துவீச்சிலும் சரி.

தென்னாப்பிரிக்காவால் அவமானப்படுத்தப்பட்ட நியூசிலாந்து- ஸ்டீவ் வாக் ஆவேசம்..!

அவர் போட்டியில் விளையாடி 5 விக்கெட்டுகளை எடுக்காவிட்டாலும், அவர் 2 விக்கெட்கள் எடுப்பார். அதே சமயம் அணியில் ஜடேஜா இல்லாத இடத்தை அவர் நிரப்ப கூடிய ஒரு வல்லமை கொண்ட வீரர். ஜடேஜா மற்றும் அஸ்வின் இருவரும் இணைந்து ஒரு போட்டியில் விளையாடினாள் கண்டிப்பாக 4-5 விக்கெட்டுகளை எடுக்க முடியும். இதனை நான் சொல்லி தான் தெரியவேண்டும் என்கிற அவசியம் இல்லை.

இப்போது ஜடேஜா சில காரணங்களால் விளையாடாமல் இருக்கிறார். ஆனால் என்னுடைய கருத்து என்னவென்றால், ரவீந்திர ஜடேஜா நாளை நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியில் திரும்ப அணியில் இடம்பெற்றாலும் கூட அஸ்வின் கண்டிப்பாக இருக்கவேண்டும்” எனவும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்