ஏலத்தில் எடுத்த கொல்கத்தா வீரர் ஒரே ஓவரில் 5 சிக்ஸர் விளாசி அசத்தல்.!

- ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது.
- நேற்றைய போட்டியில் டாம் பாண்டன் தொடர்ந்து ஐந்து பந்துகளை சிக்ஸர் விளாசினார்
தற்போது ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் – சிட்னி தண்டர் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது.
இதை தொடர்ந்து பிரிஸ்பேன் ஹீட் ஆணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக கிறிஸ் லின் ,டாம் பாண்டன்ஆகிய இருவரும் இறங்கினர்.அதிரடியாக விளையாடிய டாம் பாண்டன் 16 பந்தில் 2 பவுண்டரி , 7 சிக்சர்கள் அடித்து அரைசதம் அடித்தார்.பின்னர் 19 பந்தில் 56 ரன்கள் விளாசி தனது விக்கெட்டை இழந்தார்.
இப்போட்டியில் டாம் பாண்டன் சுழற்பந்து வீச்சாளர் அர்ஜூன் நாயர் ஓவரில் முதல் பந்தில் ரன் எடுக்கவில்லை அதன்பின் வீசிய ஐந்து பந்துகளையும் சிக்ஸர் விளாசினார். நேற்றைய போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் டக்வெல்த் முறைப்படி போட்டி 8 ஓவராக குறைக்கப்பட்டது.
This is just extraordinary.
Tom Banton launches five consecutive sixes! #BBL09 pic.twitter.com/STYOFVvchy
— KFC Big Bash League (@BBL) January 6, 2020
இறுதியாக 8 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து பிரிஸ்பேன் ஹீட் ஆணி119 ரன்கள் எடுத்தனர்.பின்னர் இறங்கிய சிட்னி தண்டர் அணி 5 ஒவரில் 4 விக்கெட்டை இழந்து 40 ரன்கள் எடுத்ததால் சிட்னி தண்டர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இப்போட்டியில் 5 சிக்ஸர் விளாசிய டாம் பாண்டனை சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடருக்கான நடந்த ஏலத்தில் கொல்கத்தா அணி அடிப்படை ஏலத்தொகையான ரூ. 1 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.அப்போது டாம் பாண்டனை ஏன் இவரை அணியில் எடுத்தார்கள் என பலர் விமர்சனங்கள் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025