ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதல் இடத்தை கைப்பற்றிய கோலி ..!

Published by
murugan
  • ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி  இந்திய அணி கேப்டன் கோலி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
  • கோலி 928 தரப்புள்ளியுடன் முதலிடத்திலும் ,  ஸ்மித் 923 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் பேட்டிங் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டு உள்ளது.இந்த பட்டியலில் இதற்கு முன்னர் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி  இந்திய அணி கேப்டன் கோலி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

வங்காளதேசத்திற்கு கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய கோலி 928 தரப்புள்ளியுடன் தற்போது முன்னேறியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஸ்மித் 36 ரன்னில் வெளியேறியதால் 923 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். மூன்றாமிடத்தில் நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சனும் நான்காம் இடத்தில் இந்திய வீரர் புஜாரா உள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் முச்சதம் அடித்ததை தொடர்ந்து பேட்டிங் தரவரிசை பட்டியலில்  12-வது இடத்தில் இருந்த 5-வது  இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆறாவது இடத்தில் ரஹானே உள்ளார்.

பந்து வீச்சு தரவரிசை பட்டியலில் பும்ரா 5-வது இடத்திலும் ,அஸ்வின் 9-வது இடத்திலும் , ஷமி 10-வது இடத்திலும்  உள்ளனர். ஒருநாள் போட்டியில்  பேட்ஸ்மேன் தர வரிசையில் விராட்கோலி முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…

5 hours ago

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

5 hours ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

5 hours ago

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

6 hours ago

“நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி!

கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…

6 hours ago

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

7 hours ago