தோனியின் எதிர்காலத்தை பற்றி கேட்டபோது நகைச்சுவையாக பதிலளித்த கோலி ..!
இந்தியா ,தென்னாபிரிக்கா இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் இறங்கிய இந்திய அணி 497 ரன்கள் எடுத்தது.இதை தொடர்ந்து இறங்கிய தென்னாபிரிக்கா தனது முதல் இன்னிங்சில் 162 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இந்திய அணி 335 ரன்கள் முன்னிலையில் இருந்ததால் ஃபாலோ ஆன் கொடுக்கப்பட்டது.இதை அடுத்து இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய தென்னாபிரிக்கா அணி 133 ரன்னில் விக்கெட் அனைத்தையும் இழந்தது.இதனால் இந்திய அணி 202 ரன்கள் மற்றும் இன்னிங்ஸை கைப்பற்றியது.
Reporter: When in Ranchi, a visit to the local boy’s crib beckons? ????????
Virat: Be our guest ???????? #TeamIndia #INDvSA pic.twitter.com/HLdDYX3Pxn— BCCI (@BCCI) October 22, 2019
இந்நிலையில் போட்டி முடிந்தபிறகு கோலி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து அவர்களிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு கோலி நகைச்சுவையாக “தோனி ஓய்வு அறையில் தான் உள்ளார். வாருங்கள் வந்து அவருக்கு ஒரு ஹலோ சொல்லுங்கள்” என தெரிவித்தார்.