வெளுத்து வாங்கிய கோலி ,ஜடேஜா ..! 601 ரன் குவித்த இந்திய அணி..!

Published by
murugan

இந்தியா, தென்னாபிரிக்கா இடையே  இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழந்து 273 ரன்கள் எடுத்தது. இதில்  மயங்க அகர்வால் 108 ரன்கள் எடுத்து வெளியேறினர்.
களத்தில் கோலி 63 , ரஹானே 18  ரன்கள் உடன் இருந்தனர். இன்று  இரண்டாவது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடங்கியது. சிறப்பாக விளையாடிய ரஹானே 59 ரன்னில்  ஆட்டமிழந்தார். பின்னர் விராட் கோலி , ரவீந்திர ஜடேஜா இருவரும் கூட்டணி சேர்ந்தனர்.
Image
ஆட்டம் தொடக்கத்தில் நிதானமாக விளையாடினர்.விராட் கோலி 173 பந்தில் சதம் அடித்தார். பின்னர் 295 பந்தில் இரட்டை சதம் விளாசினார்.  இரட்டை சதம் அடித்ததன் மூலம் கோலி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்களின் சார்பில் அதிக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் 7 முறை இரட்டை சதம் அடித்துள்ளார். ஜடேஜா 71 பந்தில் அரைசதம் அடித்தார். இவர்கள் இருவரும் 215 பந்தில் 200 ரன்கள் அடித்தனர்.விராட் கோலி 250 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஜடேஜா 104 பந்தில் 91 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இந்திய அணி 5 விக்கெட் இழந்து 601 ரன்கள் எடுத்த போது இந்திய அணி டிக்ளேர் செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 12 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 34 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது.

Published by
murugan

Recent Posts

பவுலிங்கில் மிரட்டிய கொல்கத்தா.., மளமளவென சரிந்த பஞ்சாப்.., 15 ஓவரில் ஆல் – அவுட்..!

சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி…

2 hours ago

வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!

சென்னை : அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை…

2 hours ago

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!

டெல்லி : சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது…

3 hours ago

நீயா.? நானா.? பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் தேர்வு.., பந்து வீச தயாரான கொல்கத்தா.!

சண்டிகர் : ஐபிஎல் தொடரின் இன்றைய மேட்சில், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் முல்லன்பூர் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும்…

3 hours ago

”சாட்டை சேனலுக்கும் நாதக விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” – சீமான்.!

சென்னை : சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாட்டை துரைமுருகன்…

4 hours ago

ஏப்ரல் 17-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்.., முக்கிய ஆலோசன.!

சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகின்ற ஏப்ரல் 17ம் தேதி அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் சென்னை…

5 hours ago