டெஸ்ட் போட்டியில் கேப்டனாக கோலி மூன்றாம் இடம் ..!
இந்தியா தென் ஆப்பிரிக்கா இடையே முதல் டெஸ்ட் போட்டிவிசாகப்பட்டினத்தில் நடை பெற்றது. இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 502 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 431 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது.இதனால் இந்திய அணி 71 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.
இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 323 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது இதனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு 395 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் 191 ரன்களுக்கு தென்ஆப்பிரிக்கா அனைத்து விக்கெட்டையும் இழந்தது.இதனால் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் 49 டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு கேப்டனாக இருந்து அதிக போட்டிகளில் அணியை வெற்றி பெற செய்த கேப்டன்களில் விராட் கோலி மூன்றாம் இடத்தில் உள்ளார். கோலி இதுவரை 29 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்து வெற்றியை பெற்று தந்து உள்ளார்.முதலிடத்தில் ஸ்டீவ் வா உள்ளார்.
ஸ்டீவ் வா – 36
ரிக்கி பாண்டிங் – 34
விராட் கோலி – 29 *