கோப்பை வென்ற கையுடன் நியூசிலாந்திற்கு கோலி தலைமையில் இந்திய அணி பயணம்.!
- விராட் கோலி தலைமையிலான அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றிகரமாக 2:1 என்ற கணக்கில் முடித்தது.
- அடுத்து நியூசிலாந்துடன் 5, T20 போட்டி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக இந்திய அணி இன்று பெங்களூருவில் இருந்தே நியூசிலாந்து புறப்படுகிறது.
இந்தியாவில் ஆஸ்திரேலியா அணி பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. இறுதி போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்று அபாரமாக விளையாடி வெற்றியை சூட்டியது. விராட் கோலி தலைமையிலான அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றிகரமாக 2:1 என்ற கணக்கில் முடித்தது. பின்னர் வெற்றியின் உற்சாகத்திலேயே அடுத்து நியூசிலாந்துடன் 5, T20I போட்டி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக இந்திய அணி இன்று பெங்களூருவில் இருந்தே நியூசிலாந்து புறப்படுகிறது.
இந்நிலையில், சிங்கப்பூர் வழியாக ஆக்லாந்துக்கு இந்திய அணி வீரர்கள் சென்று அடைகிறார்கள். இந்தியா – நியூசிலாந்து மோதும் முதல் T20I போட்டி ஆக்லாந்தில் 24-ம் தேதி தொடங்கவுள்ளது. பிப்ரவரி மாதம் 2-ம் தேதியுடன் T20I போட்டி முடிகிறது. அதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டிகள் பிப்ரவரி 5-ம் தேதி முதல் 11-ம் தேதி வரையும், டெஸ்ட் போட்டிகள் பிப்ரவரி 21-ம் தேதி முதல் மார்ச் 4-ம் தேதி வரையும் நடக்க இருக்கிறது.
இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டிக்கான வீரர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் அணி வீரர்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பாக்கப்படுகிறது. நேற்றைய ஆட்டத்தில் தவானுக்கு காயம் ஏற்பட்டதால், இதனால் அவர் நியூசிலாந்து பயணத்தில் இடம் பெறுவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.
நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் :
விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, தவான், லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், ஜடேஜா, மணிஷ் பாண்டே, பும்ரா, சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர்.