இந்தியா , தென்னாப்பிரிக்கா இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று புனேவில் தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா, மயங்க அகர்வால் இருவரும் களமிறங்கினார்.
ஆட்டம் தொடக்கத்திலேயே ரோஹித் 14 ரன்களில் வெளியேற பின்னர் புஜாரா , மயங்க அகர்வால் இருவரும் அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.சிறப்பாக விளையாடி வந்த புஜாரா 58 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் நிதானமாக விளையாடி மயங்க் அகர்வால் சதம் அடித்து 108 ரன்னுடன் வெளியேறினர்.
இவர்களின் 3 விக்கெட்டுகளையும் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா பறித்தார். நேற்று ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டை இழந்து 273 ரன்கள் எடுத்திருந்தது. களத்தில் கோலி 63 ரஹானே 18 ரன்களுடன் இருந்தனர்.
இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது. நிதானமாக விளையாடிய ரஹானே அரைசதம் அடித்தார். அடுத்த சிறிது நேரத்திலேயே கேப்டன் கோலி சதம் அடித்தார். கோலிக்கு டெஸ்ட் போட்டியில் இது 26-வது சதம் ஆகும். மேலும் இந்த வருடம் கோலி அடித்த முதல் சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்திய அணி 115.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 368 ரன்கள் எடுத்து உள்ளது. கோலி 115 , ரஹானே 59 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…