வெளுத்து வாங்கிய கே.எல் ராகுல் , ஸ்ரேயாஸ் ஐயர்.! 348 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா .!
- இந்தியா, நியூஸிலாந்து இடையில் இன்று முதல் ஒருநாள் போட்டி ஹாமில்டனில் நடைபெற்று வருகிறது.
- முதலில் இறங்கிய இந்திய அணி 50 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 347 ரன்கள் குவித்தனர். நியூஸிலாந்து அணியில் டிம் சவுதி 2 விக்கெட்டை பறித்தார்.
இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. சமீபத்தில் விளையாடிய 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி ஒயிட் வாஷ் தொடரை கைப்பற்றியது.
இதைதொடர்ந்து இந்த இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றார்.இன்று முதல் ஒருநாள் போட்டி ஹாமில்டனில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா , மாயங்க் அகர்வால் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் இருந்து தடுமாறி விளையாடிய இருவரும் பிருத்வி ஷா (20), மாயங்க் அகர்வால் (32) ரன்களில் வெளியேற பின்னர் இறங்கிய கேப்டன் கோலி , ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
நிதானமாக விளையாடிய கோலி அரைசதம் விளாசி 51 ரன்னில் வெளியேறினார். இதையெடுத்து இறங்கிய கே.எல் ராகுல் , ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் கூட்டணி அமைத்து அதிரடி காட்டினர்.சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் சதம் விளாசினார். பின்னர் கடைசிவரை அதிரடியாக விளையாடிய கே.எல் ராகுல் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 88 ரன்கள்குவித்தார்.
இறுதியாக இந்திய அணி 50 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 347 ரன்கள் குவித்தனர். நியூஸிலாந்து அணியில் டிம் சவுதி 2 விக்கெட்டை பறித்தார்.348 ரன்கள் இலக்குடன் நியூஸிலாந்து அணி விளையாடி வருகிறது.