சதம் விளாசிய கே.எல்.ராகுல்.. 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா..!
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டி நேற்று செஞ்சுரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்தது. நேற்றைய போட்டியின்போது மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. இதனால் நேற்றைய முதல் நாள் முடிவில் இந்தியா 59 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 208 ரன்கள் எடுத்து இருந்தனர். களத்தில் முகமது சிராஜ் ரன் எடுக்காமலும், கேஎல் ராகுல் 70 * ரன்கள் இருந்தார். இதைத்தொடர்ந்து, இன்று 2-ஆம் நாள் ஆட்டம் தொடங்க இருந்த நிலையில் மைதானத்தில் ஈரப்பதம் இருப்பதால் போட்டி தொடங்க தாமதமானது.
பின்னர் போட்டி தொடங்கியது, ஆட்டம் தொங்கிய சிறிது நேரத்திலே முகமது சிராஜ் 5 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். இருப்பினும் மறுபுறம் விளையாடி வந்த கே.எல் ராகுல் சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசினார். கே.எல் ராகுல் 112 பந்திற்கு 95 ரன்கள் எடுத்து இருந்தபோது 65 ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து சதத்தை பூர்த்தி செய்தார்.
முதல் இன்னிங்ஸில் 318 ரன்னிற்கு ஆல் அவுட் ஆன ஆஸ்திரேலியா ..!
அடுத்த இரண்டு ஓவரில் ஒரு ரன் கூட எடுக்காமல் கே.எல் ராகுல் 101 ரன்னில் நந்த்ரே பெர்கர் ஓவரில் போல்ட் ஆனார். இறுதியாக இந்திய அணி 67.4 ஓவரில் 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல் ராகுல் 101,விராட் கோலி 38, ஷ்ரேயாஸ் ஐயர் 31, ஷர்துல் தாக்கூர் 24 ரன்கள் எடுத்தனர்.
தென்னாபிரிக்கா அணியில் ககிசோ ரபாடா 5 விக்கெட்டையும், நந்த்ரே பெர்கர் 3 , மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி தலா 1 விக்கெட்டையும் பறித்தனர். பந்துவீச்சில் ரபாடா, நந்த்ரே பெர்கர் மிரட்டி இந்திய அணியை தடுமாற செய்தனர். ரபாடா 20 ஓவர் வீசி அதில் 4 ஓவர் மெய்டன் செய்து 5 விக்கெட்டை பறித்து 59 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அதேபோல நந்த்ரே பெர்கர் 15.4 ஓவர் வீசி அதில் 4 ஓவர் மெய்டன் செய்து 3 விக்கெட்டை பறித்து 50 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
இந்நிலையில், தென்னாபிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது. தற்போது 1 விக்கெட்டை இழந்து 49 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. களத்தில் டோனி டி ஜோர்ஜி 12* , டீன் எல்கர் 29* ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.