இந்தியாவில் நடைபெறும் மிகப் பெரிய கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியன் பிரீமியர் (ஐபிஎல்) லீக்தான். கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர், உலகில் அளவில் அதிகம் கவனிக்கப்படும் தொடராக மாறியுள்ளது. இந்த சூழலில், அடுத்தாண்டு ஐபிஎல் தொடரின் 17வது சீசன் நடைபெற உள்ளது. இதற்காக இபிஎல் 10 அணி நிர்வாகமும் தங்களது வீரர்கள் தேர்வில் மும்மரமாக செயல்பட்டு வருகிறது.
அதுமட்டுமில்லாமல், வரும் 19ம் தேதி ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் முதல்முறையாக நடைபெற உள்ளது. இதனால், எந்தந்த அணிகளுக்கு எந்தந்த வீரர்கள் செல்வார்கள் என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 2023 சீசனைத் தவறவிட்ட ஷ்ரேயாஸ் ஐயர், 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாபர் அசாமை ஓரம்கட்டி.. பாகிஸ்தானிலும் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர் சுப்மான் கில்!
இதுபோன்று, கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஸ்டாண்ட்-இன் கேப்டனாக இருந்த நிதிஷ் ராணா, 2024 ஐபிஎல் தொடரில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, கடந்த 2 ஆண்டுகளாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் ஆலோசகராக இருந்த கவுதம் கம்பீரின் ஒப்பந்த காலம் முடிந்ததால், தற்போது மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கே திரும்பியிருந்தார்.
கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக கம்பீர் வந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், 2024 ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை கொல்கத்தா அணி வெளியிட்டிருந்தது. ஷ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ஜேசன் ராய், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன் உள்ளிட்ட 13 வீரர்களை அந்த அணி தக்க வைத்த நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2வது நாளான இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள மாடு பிடி வீரர்கள் தயாராகி வருகிறார்கள்.…
சென்னை : சினிமாதுறையை போல கிரிக்கெட் துறையிலும் வீரர்கள் விவாகரத்து செய்தி வெளியாவது என்பது வழக்கமான ஒரு விஷயமாக மாறிவிட்டது…
சென்னை : தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், இன்று (ஜனவரி 7)…
சென்னை : அமரன் திரைப்படம் கொடுத்த ஒரே வெற்றி இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியை பான் இந்திய அளவுக்கு கொண்டு சென்றது என்றே…
நேபாளம் : நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று ஜனவரி 7, 2025 அன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக…