இந்திய கேப்டன் கோலி கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்து வருகிறார். இந்திய அணிக்கு குறுகிய காலத்தில் அதிகமான வெற்றியை பெற்று கொடுத்து உள்ளார். அதுமட்டுமல்லாமல் தற்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
இவர் சில வீரர்களின் சாதனையை அவ்வப்போது முறியடித்து வருகிறார்.தற்போது கோலி தலைமையிலான இந்திய அணி நியூஸிலாந்தில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் டி 20 தொடரில் விளையாடி வருகின்றனர்.இந்த டி 20 தொடரில் கோலி முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை முறியடித்து டி 20 தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய கேப்டன் என்ற சாதனையை படைக்க வாய்ப்பு உள்ளது.
டி 20 தொடரில் முன்னாள் கேப்டன் தோனி 1112 ரன்கள் அடித்து உள்ளார்.ஆனால் கோலி கேப்டனாக 1088 ரன்கள் அடித்து உள்ளார்.இந்த டி 20 தொடரில் 25 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் தோனியின் சாதனையை கோலி முறியடிப்பார்.
சர்வேதேச டி20 போட்டியில் கேப்டனாக அதிக ரன்கள் அடித்த பட்டியலில் முதலிடத்தில் தென்னாபிரிக்கா வீரர் டூ பிளெஸ்ஸிஸ் 1273 , இரண்டாவது இடத்தில் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 1148 ரன்களுடன் உள்ளனர்.இவர்களின் சாதனையையும் கோலி முறியடிக்க வாய்ப்பு உள்ளது.
5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் இன்னும் 3 போட்டிகள் உள்ளன.முதல் இரண்டு போட்டிலும் இந்தியா வெற்றி வாகை சூடியது.நாளை மூன்றாவது போட்டி நடைபெற உள்ளது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் நாளை (மார்ச் 10) முதல் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி…