2 வருடம் கழித்து அதே பாணியில் திருப்பி அடித்த கிங் கோலி ..!
- கடந்த 2017-ம் ஆண்டு விராட் கோலி விக்கெட்டை வீழ்த்திய பின் வில்லியம்ஸ் நோட்புக் ஸ்டைலில் அவரை வழியனுப்பி வைத்தார்.
- நேற்றைய போட்டியில் கோலி ஜேம்ஸ் வில்லியம்ஸ் வீசிய பந்தை பவுண்டரி அடித்த பிறகு , ஜேம்ஸ் வில்லியம்ஸ் கொண்டாடும் “நோட்புக் ஸ்டைலில்” கொண்டாடினார்.
நேற்று இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே முதலாவது டி 20 போட்டி நடைபெற்றது. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டை இழந்து 20 வரை முடிவில் 207 ரன்கள் அடித்தனர்.இதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடி 4 விக்கெட்டை இழந்து 18.4 ஓவர் 209 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 பந்தில் 94 ரன்கள் குவித்துகடைசிவரை களத்தில் நின்றார்.அதில் 6 பவுண்டரி , 6 சிக்சர்கள் அடங்கும்.
‘[Kesrick] Williams had given me the notebook when he dismissed me in Jamaica [in 2017], so I remembered it from there. We gave each other a high-five later. Play hard but respect the opponent’ – Virat Kohli ???? #INDvWI #masterclass #revenge pic.twitter.com/pkCUCMDfcO
— श्रीमान जॉन E (@enigmaticjohny) December 6, 2019
போட்டியின்போது விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேம்ஸ் வில்லியம்ஸ் ஓவரை வெளுத்து வாங்கினார். அப்போது ஜேம்ஸ் வில்லியம்ஸ் வீசிய பந்தை பவுண்டரி அடித்த பிறகு கோலி , ஜேம்ஸ் வில்லியம்ஸ் கொண்டாடும் “நோட்புக் ஸ்டைலில்” கொண்டாடினார்.
கடந்த 2017-ம் ஆண்டு விராட் கோலி விக்கெட்டை வீழ்த்திய பின் வில்லியம்ஸ் நோட்புக் ஸ்டைலில் அவரை வழியனுப்பி வைத்தார். தற்போது கோலி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து போட்டி முடிந்த பின் கோலியிடம் கேள்வி எழுப்பியபோது , ஜமைக்காவில் நடைபெற்ற போட்டியின்போது எனக்கு நோட்புக் ஸ்டைல் மூலம் வழி அனுப்பி வைத்தனர்.
அதனால் இன்று நான் அதை செய்ய வேண்டும் நினைத்தேன் எனக்கூறினார். ஆட்டம் முடிந்த பிறகு நாங்கள் அனைவரும் புன்னகையுடன் கை கொடுத்தோம் . இதுதான் கிரிக்கெட். களத்தில் கடினமாக விளையாடினாலும் எதிரணிக்கு எப்போது மதிப்பு உண்டு என கூறினார்.