ஹிட் மேன் சாதனையை முறியடித்த கிங் கோலி.!
- இந்திய அணி நெற்றியை போட்டியில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
- 2019-ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கோலி முதலிடம்.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே இன்று 3 வது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலத்தில் கட்டாக்கில் உள்ள பாரபதி மைதானத்தில் நடைபெற்றது.இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்தார்.
முதலில் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஒவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 315 ரன்கள் அடித்தது.பின்னர் இறங்கிய இந்திய அணி 48.4 ஓவர் முடிவில் 316 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலியின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்றது.இப்போட்டியில் கோலி 85 ரன்கள் குவித்தார்.அதில் 9 பவுண்டரி அடங்கும். இந்நிலையில் இந்த வருடம் சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்களில் முதலிடத்தை கோலி பிடித்து உள்ளார்.
2019-ம் ஆண்டு மட்டும் கோலி சர்வதேச போட்டிகளில் 2454 ரன்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் ரோஹித் 2442 ரன்களுடன் , பாபர் அசாம் 2082 ரன்கள் எடுத்து மூன்றாவது இடத்திலும் உள்ளார்.
நேற்றைய போட்டியில் முதலில் 2019-ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் இருந்தார் .பின்னர் இறங்கிய கோலிஅதிரடி ஆட்டத்தால் அவரின் சாதனையை முறியடித்து உள்ளார்.