இங்கிலாந்து அணியின் துணை பயிற்சியாளராக பொல்லார்ட் நியமனம்!
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்கள் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். டி20 உலகக்கோப்பை போட்டி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்படவுள்ளது. டி20 போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது.
இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்காக 101 டி 20 போட்டிகளில் விளையாடிய முன்னாள் கேப்டன் கீரன் பொல்லார்ட், இந்த முறை டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துடன் இணையவுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியின் துணைப் பயிற்சியாளராக கீரன் பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி! இந்திய வீரர்களை குறித்த சுனில் கவாஸ்கர்!
ஏற்கனவே இந்த தகவல் வெளியாகி இருந்த நிலையில், தற்போது இந்த தகவல் பற்றி இங்கிலாந்து கிரிக்கெட் அணியே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டி20 போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. எனவே, மேற்கிந்தியத் தீவுகள் மைதானம் எப்படி இருக்கும் என்பது கீரன் பொல்லார்டுக்கு நன்றாக தெரியும் என்பதால் இங்கிலாந்து அணியின் துணைப் பயிற்சியாளராக கீரன் பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
கீரன் பொல்லார்ட் டி20 கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்பதில் சந்தேகமில்லை. அந்த அளவிற்கு தன்னுடைய பேட்டிங் மூலம் டி20 போட்டிகளில் அதிரடியாக விளையாடி இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர் தற்போது பயிற்சியிலும் கலக்கி வருகிறார். ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக உள்ளார். தற்போது இங்கிலாந்தின் ஆலோசகர் பயிற்சியாளராக மாறி கீரன் பொல்லார்டின் ஆளுமையை அதிகரித்துள்ளது.