PoojaArthi [File Image]
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் இன்று தமிழ்நாட்டிற்கு 7-வது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டி கடந்த 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.
சென்னையில் நடைபெற்றுவரும் கேலோ இந்தியா யூத் விளையாட்டு போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீரர் வீராங்கணையர்கள் பல போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.
அதன்படி, ஐந்தாம் நாளாக இன்று சென்னையில் நடைபெற்ற இறுதிப் போட்டியின் மகளிர் ஒற்றையர் ஸ்குவாஷ் பிரிவில், தமிழ்நாடு வீராங்கனை பூஜா ஆர்த்தி, மகாராஷ்டிராவின் நிருபமா துபேயை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்று அசத்தியுள்ளார். இந்நிலையில், தமிழகத்திற்கு இது 7-வது தங்கம் கிடைத்துள்ளது.
தொடர்ந்து தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு முதலிடம்!
முன்னதாக, நான்காவது நாளான நேற்று நடைபெற்ற சைக்கிளிங் விளையாட்டில் மகளிர் தனி பிரிவில் தமிழக வீராங்கனை ஸ்ரீமதி தங்கம் வென்றார். அதே போல், தன்யதா ஜேபி, ஸ்ரீமதி
ஆர். தமிழரசி, எம். பூஜா ஸ்வேதா ஆகியோர் சைக்கிளிங் விளையாட்டில் மகளிருக்கான குழு பிரிவில், தங்கம் வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (ஜூலை 30, 2025) சென்னை பனையூரில்…
திருச்சி : அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, இன்று திருச்சியில் நடந்த ‘மக்களை காப்போம், தமிழகத்தை…
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் (ஜூலை 27, 2025) கடைசி நாளில், இங்கிலாந்து அணியின் கேப்டன்…
சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…
பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…