கேலோ இந்தியா போட்டி – தமிழ்நாட்டிற்கு மேலும் 2 தங்கம்!

Khelo India Youth Games

கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டியின் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் தமிழ்நாடு தங்கம் வென்றது.

6-வது கேலோ இந்தியா இளைஞர் (18 வயதுக்குட்பட்டோர்) விளையாட்டுப் போட்டி சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 19ம் தேதி தொடங்கி கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நாளை (31ம் தேதி) வரை நடைபெறுகிறது. கேலோ இந்தியா போட்டிகள் இந்த முறை தமிழ்நாட்டில் நடைபெற்று வருவதால் தங்கங்களை குவித்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற டென்னிஸ் ஆடவர் இரட்டையர் மற்றும் மகளிர் இரட்டையர் பிரிவுகளில் தமிழ்நாடு தங்கம் பதக்கம் வென்று அசத்தியுள்ளது. தமிழ்நாடு வீரர்களான பிரனவ், மஹாலிங்கம் இணை 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் மஹாராஷ்டிரா இணையையும், ரேவதி, லக்ஷ்மி இணை 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் கர்நாடக இணையையும் வீழ்த்தி தங்கம் வென்றுள்ளனர்.

அந்த வகையில், இன்று காலை சென்னையில் நடைபெற்ற பெண்கள் 81 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில், தமிழ்நாட்டிற்கு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்று அசத்தியது. அதன்படி, 188 கிலோ எடைதூக்கி தமிழ்நாடு வீராங்கனை கீர்த்தனா முதலிடம் பிடித்து தங்கமும், 184 கிலோ பளு தூக்கிய வீராங்கனை ஓவியா வெள்ளி வென்றது குறிப்பிடத்த்க்கது.

தற்போது, பதக்கபட்டியலில் மகாராஷ்டிரா 44 தங்க பதக்கத்தையும், 39 வெள்ளிப் பதக்கங்களையும், 44 வெண்கலம் பதக்கம் என மொத்தம் 127 பதக்கங்களை வென்று முதல் இடத்தில் உள்ளது.

பளுதூக்குதல் போட்டியில் தமிழ்நாடு அணி தங்கம்.!

அடுத்தபடியாக, ஹரியானா 33 தங்கம், 20 வெள்ளி, 42 வெண்கலம் என மொத்தம் 95 பதக்கங்களுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. 29 தங்கம், 19வெள்ளி 34 வெண்கலம் என 82 பதக்கங்களுடன் தமிழ்நாடு 3ஆவது இடத்தில் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்