இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரோஹித் ஷர்மாக்கு ராஜிவ்காந்தி கேல்ரத்னா விருது வழங்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
விளையாட்டுத் துறையில் சிறந்த விளங்குபவர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சார்யா ஆகிய விருதுகளை மத்திய அரசு வழங்கி வருவது வழக்கம். அந்தவகையில், இந்த விருதுகளைப் பெறுபவர்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதில் இந்திய அணிக்காக சிறப்பான ஆடி, பல சாதனைகள் படைத்த கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மாவின் பெயரை தேர்வு செய்வதாக கடந்த சில தினங்களுக்கு முன் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், இன்று மத்திய அரசு வெளியிட்டுள்ள ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கான பட்டியலில் அவரின் பெயர் இருந்தது.
அவருடன் சேர்ந்து, தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, மகளிா் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா ஆகிய ஐந்து வீரர்களுக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் 29ம் தேதி காணொளி மூலம் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…