வெற்றிக்காக வலியை பொறுத்துக்கொண்ட இந்திய வீரர் – என்ன நடந்தது தெரியுமா?..!

Default Image

ஒலிம்பிக் மல்யுத்தம் அரையிறுதிப் போட்டியின்போது இந்தியாவின் ரவிக் குமாரை,கஜகஸ்தான் வீரர் கடித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற ஆண்கள் மல்யுத்தம் காலிறுதிப் போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரவிக் குமார் தஹியா ,பல்கேரியாவின் வாலண்டினோ வாங்கேலோவை 14-4 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

அதனைத் தொடர்து நடைபெற்ற 57 கிலோ ஃப்ரீஸ்டைல் அரையிறுதியில் இந்தியாவின் ரவி குமார் தஹியா,கஜகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சனாயேவை எதிர்கொண்டார்.இப்போட்டியின்போது,ரவி கடைசி நிமிடங்களில் கஜகஸ்தான் வீரரை தரையில் சாய்த்தார்,இதனால்,அவரது கிடுக்குப் பிடியிலிருந்து தப்ப கஜகஸ்தான் வீரர் ரவியின் கையை கடுமையாக கடித்துள்ளார்.இதனால்,கடுமையான வலி ஏற்பட்டும், வெற்றியைக் கைப்பற்றுவதற்காக ரவி பொறுத்துக்கொண்டார்.

இப்போட்டியின் இறுதியில்,9-2 என்ற கணக்கில் நூரிஸ்லாமை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.இதனால்,குறைந்த பட்சம் வெள்ளிப்பதக்கதை இந்தியாவுக்கு உறுதி செய்துள்ளார்.இதனால்,பலரும் அவரை பாராட்டினர்.

இந்நிலையில்,அவரது கையில் பல்குறிகள் ஆழமாக பதிந்துள்ளதால்,இன்று மாலை நடைபெறவுள்ள தங்கப்பதக்கத்திற்கான இறுதிப் போட்டியில் விளையாட அவர் முழு உடல் தகுதி பெற்றுள்ளாரா? எனக் கேள்வி எழுந்தது.இதற்கு பதிலளித்துள்ள இந்திய அதிகாரிகள், “அவர் முழு உடற்தகுதியுடன் நன்றாக உள்ளார்.போட்டியின் பின்னர் நாங்கள் அவருக்கு ஒரு ஐஸ் பேக் கொடுத்தோம்”, என தெரிவித்துள்ளனர்.

அதன்படி,இன்று மாலை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில்,ரஷ்ய வீரரும்,உலக சாம்பியனுமான ஜாவூர் உகுவேவை எதிர்கொள்ளவுள்ளார். இப்போட்டியில்,ரவி குமார் கண்டிப்பாக தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்