சர்வேதேச டி 20 போட்டியில் மிக மோசமான சாதனையை படைத்த கசுன்..!
இலங்கை கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்போது டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. நேற்று முதல் டி20 போட்டி அடிலெய்ட்டில் உள்ள அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 233 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் சதம் விளாசினார். பின்னர்234 ரன்கள் இலக்குடன் இறங்கி இலங்கை அணி ஆட்டம் தொடக்கத்திலிருந்து விக்கெட்டை இழந்தது.
இதில் அதிகபட்சமாக தாசுன் ஷானகா 17 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியாக இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 99 ரன்கள் மட்டுமே எடுத்தது.இதனால்ஆஸ்திரேலியா 134 ரன்கள் வித்தியாசத்தத்தில் வெற்றி பெற்றது.
இதில் ஆடம் சம்பா 3 விக்கெட்டும், கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் இருவரும் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்நிலையில் இப்போட்டியில் இலங்கை பந்து வீச்சாளர் கசுன் 4 ஓவர் வீசி 75 ரன்களை கொடுத்தார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற மோசமான சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன் செஸ் குடியரசுக்கு எதிரான போட்டியில் துருக்கியின் துனஹன் 70 ரன்கள் இறங்கி கொடுத்ததே மோசமான சாதனையாக இருந்தது.அந்த சாதனையை தற்போது கசுன் முறியடித்துள்ளார்.